நொய்டா புத்தாண்டு கொண்டாட்டம் – ஒரே இடத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி!
நொய்டாவில் வரவிருக்கின்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஒரே இடத்தில் 100 பேர் மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் முன்பதிவுடன் கூடலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக உலகில் உள்ள அனைத்து மக்களுமே தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்பொழுது வரையிலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், பண்டிகை காலங்களில் மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் சில தளர்வுகளை கொடுத்து வந்தாலும் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், நொய்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரே இடத்தில் 100 பேர் மட்டுமே கூடலாம், அதுவும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, வெப்பநிலையை அறிந்து, முக கவசம் அணிந்து கொண்டு செல்பவர்களுக்கு மட்டுமே அந்த இடத்திலும் அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள போலீஸ் கமிஷனர் அல்லோக் அவர்கள், கொரோனா வைரஸ் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 100 பேர் மட்டுமே ஒரு இடத்தில் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கும் முன் அனுமதி நிச்சயம் வேண்டும். முன் அனுமதி பெற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செல்பவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் எனவும், இது நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்காக தான்.
எனவே மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு முன் அனுமதி பெற்று நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் கூட தங்களது முகவரி மற்றும் தொலைபேசி எண்களை நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் கொடுக்க வேண்டுமெனவும், இதுகுறித்து நிகழ்வின்ஒருங்கிணைப்பாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.