கொரோனாவால் 70% ஆண்கள் உயிரிழந்துள்ளனர்…சுகாதார அமைச்சகம்..!
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களில் 70% ஆண்கள் என பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 60 வயதிற்குட்பட்டவர்களில் 45% கொரோனாவால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில், இதுவரை மொத்தமாக
கொரோனாவால் 63% ஆண்களும், 37% பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், மொத்த உயிரிழப்புகளில் 39 சதவீதம் 26-44 வயதுக்குட்பட்டவர்களும், 52 சதவீதம் 18-44 வயதுக்குட்பட்டவர்களும் உள்ளன, ஆறு மாதங்களுக்குப் பிறகு தினசரி உயிரிழப்பு 300 க்கும் குறைவாக உள்ளதாக கூறினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 17,000 க்கும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நேற்றும், இன்றும் அசாம், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் குஜராத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.