ஆஸ்திரேலியா ஊடகத்தை தவிடுபொடியாக்கி முல்லாக் பதக்கம் வென்ற ரஹானே..!

Default Image

4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

விராட் கோலி நாடு திரும்பிய நிலையில் கேப்டனாக பொறுப்பேற்று ரஹானே தலைமையில் இந்திய அணி பாக்ஸிங் டே டெஸ்டில் களமிறங்கியது. தொடக்க முதலே தனது அபார பந்து வீச்சின் மூலம் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை முதல் இன்னிங்ஸில் 195 மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் 200 என்ற ஸ்கோரில் மடக்கியது. 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான வெற்றியை நோக்கி பயணித்த இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யார் இந்த முல்லாக் ?

இந்த இரண்டாவது டெஸ்ட்டில் ஆட்ட நாயகன் விருதை வென்றபோது, அஜின்கியா ரஹானேவுக்கு முல்லாக் பதக்கம் வழங்கப்பட்டது.

johnny mullagh

ஜானி முல்லாக் இவர் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினரை சேர்ந்தவர். 1868-இல் உருவாக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான ஆல் ரவுண்டர் ஜானி முல்லாக். இந்த பழங்குடியினர் அணி அதே ஆண்டே தனது முதல் சர்வதேச பயணத்தை பிரிட்டன் மேற்கொண்டு பல போட்டிகளில் பங்கேற்றது.

ஆஸ்திரேலியா அணி உலக அரங்கில் தங்களது திறமையை வெளிப்படுத்த ஜானி முல்லாக் மற்றும் அவரது பழங்குடியினர் அணி முக்கிய பங்காற்றியது. ஜானி முல்லாக் 1868 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 47 போட்டிகளில் 45 போட்டிகளில் பங்கேற்றார். அதில் 1,698 ரன்களை எடுத்ததுடன் 23.65 சராசரி மற்றும் 245 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

முதல் மகுடம்:

இந்த ஆண்டுதான் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது , இதனை ஆஸ்திரேலிய வீரர்கள் தான் வாங்குவார்கள் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் மார்தட்டின. இதனை தவிடுபொடியாக்கி இந்தியாவின் பொறுப்பு கேப்டன் ரஹானே தட்டிச்சென்றுள்ளார், இந்த விருதினை பெரும் முதல் இந்தியர் இவரே.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 18042025
SRH Lose MI in ipl 2024 april 17
ADMK Chief secretary Edappadi Palanisamy
Nainar Nagendran - Annamalai
Mumbai Indians
SRHvsMI