முன்னால் மத்திய அமைச்சர் மீதான பாலியல் பலாத்காரம் வழக்கு வாபஸ் ?

Default Image

யோகி ஆதித்யநாத் தலைமை உ.பி.அரசு முன்னால் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் வழக்கை  வாபஸ் பெறுவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பாதிக்கப்பட்டவர் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக மார்ச் 6-ம் தேதி மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஷாஜஹான்பூர் நிர்வாகம் மார்ச் 9-ம் தேதி அரசு தரப்பு சட்ட அதிகாரிக்கு வழக்கை வாபஸ் பெறுவதாக எழுதியுள்ளது.

மாறாக, பாதிக்கப்பட்ட பெண் சார்பாக குடியரசுத் தலைவர், மாவட்ட நீதிபதி ஆகியோருக்கு வழக்கு வாபஸ் பெறுவது குறித்து ஆட்சேபணை தெரிவித்து கடிதங்கள் பல எழுதப்பட்டுள்ளன.

மாவட்ட கூடுதல் ஆட்சியர் சர்வேஷ் திக்‌ஷித் கூறும்போது சின்மயநந்தாவுக்கு எதிரான வழக்கை மாநில அரசு வாபஸ் பெறுவதாக முடிவெடுத்துள்ளது, எனவே இந்த நடைமுறையை அரசுதரப்பு சட்ட அதிகாரிகள் தொடங்கியுள்ளனர் என்றார்

பாதிக்கப்பட்டவர் சார்பிலிருந்து தன் கடிதத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கடும் குற்றச்சாட்டையும் எழுப்பியுள்ளது, அதாவது பிப்.25-ம் தேதி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஷாஜஹான்பூரில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயாநந்தா வீட்டில் உணவு அருந்தியதாக சாடியுள்ளார்.

சுவாமி சின்மயநந்தா ஆசிரமத்தில் பல ஆண்டுகள் இருந்த பாதிக்கப்பட்ட இந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் நவம்பர் 30, 2011-ல் முன்னாள் அமைச்சருக்கு எதிராக முதல் தகவலறிக்கைப் பதியப்பட்டது.

ஆசிரமத்தில் தன்னை சுவாமி சின்மயாநந்தா தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகார் செய்திருந்தார்.

ஆனால் சின்மயாநந்தா உயர் நீதிமன்றம் சென்றார், அங்கு அவரைக் கைது செய்ய தடை விதிக்கப்பட்டது. அதுமுதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்