உகான் கொரோனா வைரஸ் தொடர்பான செய்தி ! பத்திரிக்கையாளருக்கு 4 ஆண்டுகள் சிறை
கொரோனா வைரஸ் பரவிய ஆரம்ப கட்டத்தில் பொது ஒழுங்கை சீர்குலைத்தது உள்ளிட்டது தொடர்பாக சீன பத்திரிக்கையாளர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஷாங்காய் நீதிமன்றம் ,பத்திரிக்கையாளர் ஜாங் ஜானுக்கு தவறான தகவல்களை பரப்பியது, வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கியது, பொது ஒழுங்கை சீர்குலைத்தது மற்றும் “தீங்கிழைக்கும் வகையில் கையாண்டது” என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த தண்டனையை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
37 வயதான ஜாங் கடந்த ஆண்டு பிப்ரவரியில் உகானுக்குச் சென்று சீனாவில் தான் கொரோனா வைரஸ் தோன்றியது என்று பல்வேறு சமூகவலைத் தளங்களில் தகவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.ஆகவே அரசை விமர்சிப்பது தொடர்பாக கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.மேலும் காவலில் இருந்தபோது ஜாங் நீண்டகால உண்ணாவிரதத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.