இணையத்தில் கசிந்த 2021 கேடிஎம் ஆர்சி 200 பைக்கின் புகைப்படம்.. முக்கிய தகவல்களும் கசிந்தது!

Default Image

கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் தனது ஆர்சி (RC) ரக பைக்குகளை பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது. இந்த பைக்கின் மாடலை கேடிஎம் நிறுவனம் மாற்றுமா? என பலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், 2021 கேடிஎம் ஆர்சி 200 பைக்கின் புகைப்படம் இணையத்தில் கசிந்தது.

இதற்கு முன்பாக இந்த பைக், ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, அதன் புகைப்படங்கள் கசிந்தது. தற்பொழுதுள்ள புகைப்படம், இந்தியா, புனேவில் உள்ள தொழிற்சாலையில் இந்த புதிய 2021 கேடிஎம் ஆர்சி 200 உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து, இதன் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் கசிந்துள்ளது. அந்த புகைப்படத்தை வைத்து பார்க்கையில், KTM RC8 சூப்பர் பைக்கின் தோற்றத்தை பெற்றுள்ளது. இதில் கேடிஎம் அடையாளமான புராஜெக்டர் ஹெட்லேம்புக்கு பதிலாக ஹாலஜென் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இதன் பாடி கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டு, ஒரு கவர்ச்சியான லுக்கை குடுக்கின்றது.

இந்த புதிய 2021 கேடிஎம் ஆர்சி 200 பைக்கில் 199.5 சிசி ஒற்றை சிலிண்டர் லீகுய்ட் குல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 10,000 ஆர்பிஎம்-ல் 24.6 பிஹெச்பி மற்றும் 8,000 ஆர்பிஎம்-ல் 19.2 என்எம் டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இவற்றை இயக்க, 6 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் வரவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன் விலை, பழைய ஆர்சி 200-ஐ விட சற்று கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்