IPL 2018:நாம் ஓட்டுப்போட்டது அரசியல்வாதிகளுக்குதான்…!தோனிக்கு இல்லை …! சீறிய ஆர்.ஜே.பாலாஜி….
234 எம்எல்ஏக்கள், 40 எம்பிக்கள் ஓட்டுபோட்டு அனுப்பியிருக்கிறோம். அனைவரும் ராஜினாமா செய்தால் மொத்த நாட்டின் கவனமும் கிடைக்கும் என்று ஆர்.ஜே.பாலாஜி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன் இன்று போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தற்போது சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் டிக்கெட்களை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோல விடுதலை சிறுத்தை கட்சியினர் திருவல்லிக்கேணியில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை வழியிலேயே கைது செய்தனர் போலீசார்.
இதனால் ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் காரணமாக மைதானத்திற்கு 4 மணிக்கு வரவேண்டிய கிரிக்கெட் வீரர்கள் 6 மணிக்கு வரவுள்ளனர். சென்னை அணி வீரர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு புறப்பட தயாராக இருக்கின்றனர். வீரர்களின் புறப்பாட்டை காண ரசிகர்கள் ஓட்டலின் வெளியே காத்து கொண்டு இருக்கின்றனர்.இந்நிலையில் சென்னையில் நடக்கும் தொடர் போராட்டங்கள் காரணமாக சி.எஸ்.கே வீரர்கள் மைதானத்திற்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர். இதேபோல் கொல்கத்தா அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தனர்.
இந்நிலையில் 234 எம்எல்ஏக்கள், 40 எம்பிக்கள் ஓட்டுபோட்டு அனுப்பியிருக்கிறோம். அனைவரும் ராஜினாமா செய்தால் மொத்த நாட்டின் கவனமும் கிடைக்கும் என்றும் நாம் ஓட்டுப்போட்டது அரசியல்வாதிகளுக்குதான். தோனிக்கு இல்லை எனவும் ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.