ICC Awards: தசாப்தத்தின் சிறந்த “டெஸ்ட்” வீரர் விருதை தட்டி சென்ற ஸ்மித்!
ஐசிசியின் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்க்கு வழங்கவுள்ளது.
ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), சிறந்த வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் பல சாதனைகள் நிகழ்த்திய வீரரை தேர்வு செய்து இவ்விருது வழங்கப்படுகிறதாகவும், இதற்கான சிறந்த வீரர்களின் பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், டெஸ்ட் தொடருக்கான சிறந்த வீரராக ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை ஐசிசி, தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், இந்த 10 ஆண்டுகளில் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் 65.79 ஆவரேஜுடன் 7,040 ரன்கள் அடித்துள்ளார். இதுவரை 26 சதங்களும், 28 அரைசதங்கமும் அடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
???????? STEVE SMITH is the ICC Men’s Test Cricketer of the Decade ????????
???? 7040 Test runs in the #ICCAwards period
????️ 65.79 average ➜ Highest in top 50
???? 26 hundreds, 28 fiftiesUnique, relentless and unbelievably consistent ???? pic.twitter.com/UlXvHaFbDz
— ICC (@ICC) December 28, 2020