“உலகின் கடைசி பெருந்தொற்று கொரோனா அல்ல”- உலக நாடுகளை எச்சரிக்கும் WHO!

Default Image

கொரோனா வைரஸ் உலகின் கடைசி பெருந்தொற்று இல்லையெனவும், கொரோனாவை தடுக்க அதிகம் செலவிடுவதை தவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸே இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ் பரவதொடங்கியது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆயினும் பிரான்ஸ், ஜப்பான் ஸ்பெயின், உள்ளிட்ட சில நாடுகளில் இந்த புதிய வகையான கொரோனா வைரஸ் கண்டறியப்பயுள்ளது.

கொரோனா வைரஸ் உலகின் கடைசி பெருந்தொற்று இல்லையென உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கொரோனா வைரஸ் உலகின் கடைசி பெருந்தொற்று இல்லையெனவும், காலநிலை மாற்றத்தையும், விலங்குகளின் நலனையும் சரிசெய்யாமல் மனித குளத்தின் நலத்தை மட்டும் மேம்படுத்துவது பலன்தராது என கூறினார்.

மேலும் பேசிய அவர், கொரோனாவை தடுக்க அதிகம் செலவிடுகிறோமோ தவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிடுவதாகவும் டெட்ரோஸ் அதானோம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்