ஓட்டுனர் உரிமம் செல்லுபடிக் காலம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு..!

Default Image

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன கட்டாய ஆவணங்களை செல்லுபடி காலத்தை மீண்டும் நீட்டித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு ஒருவரின் ஓட்டுநர் உரிமம் அல்லது பிற மோட்டார் வாகன ஆவணம் முன்பே காலாவதியாகி விட்டால், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன கட்டாய ஆவணங்களை செல்லுபடிக் காலம் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்துமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கும், தற்போதுள்ள நிலைமையை மனதில் வைத்துக் கொண்டு இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இந்த ஆவணங்களின் நீட்டிப்பு தொடர்பாக மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 அன்று இதே போன்று நீட்டிக்கப்பட்டது. டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்