விரைவில் தேர்தல் அறிக்கை.,பாலியல் குற்றத்தை விசாரிக்க தனி நீதிமன்றம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Default Image

அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் நிதி உதவியை வழங்கிய பின் பேசிய அவர், தேர்தல் அறிக்கையை தயாரித்து வருவதாகவும், அதில் ஆசிரியர் சங்க கோரிக்கைகளும் இடம்பெறும் என நம்புவோம் என்று கூறியுள்ளார்.

சென்னை வண்ணாரப் பேட்டையில் 13 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட சம்பவம் கண்களை கலகடிக்கிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் போது புகார் அளிக்க தயங்கும் மனநிலையை மாற்றவேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக ஆட்சியில் பெண் குழந்தைகள் மட்டுமின்றி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மாவட்ட ரீதியாகத் தனி நீதிமன்றம் அமைத்து ஒரு நாள் கூட தாமதமின்றி தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். திமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்