கொரோனா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து..7 பேர் உயிரிழப்பு.!
எகிப்து: தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.
எகிப்திய தலைநகர் கெய்ரோவின் புறநகரில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த தனியார் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
மத்திய கெய்ரோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள எல் ஒபூரில் உள்ள மிஸ்ர் அல் அமல் மருத்துவமனையில் காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், முதல் கட்ட விசாரணைகளின்படி மின்சாரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தன.
மருத்துவமனை வெளியேற்றப்பட்ட நோயாளிகள் கெய்ரோவில் உள்ள ஒரு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டள்ளனர் .