சென்னையில் நாளை முதல் கூடுதலாக 90 புறநகர் ரயில்கள் இயக்கப்படும்!

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 90 புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் புறநகர் ரயில்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பின்னர், அனைத்து மக்களும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அதன்படி பொதுமக்கள், காலை 7 முதல் 9.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சென்னையில் நாளை முதல் கூடுதலாக 90 புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்தது. தற்போது 410 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் சூழலில், நாளை முதல் 500 ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025