ஒடிசாவில் நீட் தேர்வு எழுதி மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள 64 வயதான ஓய்வு பெற்ற வங்கியாளர்!

Default Image

ஒடிசாவில் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் 64 வயதுடைய ஓய்வு பெற்ற வங்கியாளர் நீட் தேர்வெழுதி மருத்துவ மாணவராக முதல் ஆண்டு சேர்ந்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெய் கிஷோர் பிரதான் என்பவர் மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டு தனது 64வது வயதில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை, ஜெய் கிஷோருக்கு 64 வயதாகிறது. இவர் எஸ்பிஐ வங்கியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி. இவர் ஊனமுற்றோர் இட ஒதுக்கீடு பிரிவில் அரசு நடதத்க்கூடிய சுரேந்திர சாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்று முதல் வருட மருத்துவ மாணவராக சேர்க்கை பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தான் உயிருடன் இருக்கும் வரை மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். நாட்டின் மருத்துவ கல்வி வரலாற்றிலேயே நிகழ்ந்த அரிய நிகழ்வுகளில் ஒன்றுதான் இதுபோன்ற வயதில் மூத்த ஒருவர் மருத்துவ மாணவராக சேர்க்கை பெறுவது என அப்பல்கலைக்கழகத்தின் இயக்குனர் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் அவரது மகள்களில் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மரணமடைந்தது தான் அவர் நீட்  தேர்வு எழுதி மருத்துவராக உருவாகுவதற்கான ஆசையை தூண்டி இருக்கும் எனவும் அருகில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
tamil news live
School Leave
CSK - team
power outage 26.11.2025
Holiday for schools and colleges in Nagapattinam
rcb squad 2025