பிரான்ஸ் நாட்டை தொடர்ந்து ஸ்பெயினிலும் பரவிய “உருமாறிய” கொரோனா வைரஸ்!
பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளை தொடர்ந்து ஸ்பெயின் நாட்டிலும் இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது.
இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அந்தவகையில், இங்கிலாந்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் நடக்க, பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ் பரவதொடங்கியதை தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.
ஆயினும் பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த புதிய வகையான கொரோனா வைரஸ் கண்டறியப்பயுள்ளதை தொடர்ந்து, தற்பொழுது ஸ்பெயின் நாட்டிலும் இந்த புதிய வகையான கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருக்கு இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் ஸ்பெயின் நாட்டில் தீவிர கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.