#BREAKING: மனித உரிமை ஆணைய கூட்டம்- ஸ்டாலின் புறக்கணிப்பு ..!
மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் தேர்வுக்கான கூட்டம், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் நடந்துவரும் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி சபாநாயகர் தனபால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மனித உரிமை ஆணைய தலைவர் பதவி ஓராண்டாக காலியாக உள்ளது. அடுக்கடுக்காக மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் தலைவர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. ஆட்சி முடியும் தருவாயில் அவசரமாக நடக்கும் தேர்வு குழு கூட்டத்தில் பங்கேற்பது பயனற்றது என ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.