“2004 டிசம்பர் 26” உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம் – முக ஸ்டாலின்

Default Image

இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16-ஆம் ஆண்டு இன்று என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுனாமி தாக்கியதின் 16- வது நினைவு தினத்தையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும், கடலில் பாலை ஊற்றியும் பொதுமக்கள், மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தோனேஷியா அருகே பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி உருவெடுத்தது. கரையை நோக்கி நகர்ந்த சுனாமி பேரலை கடற்கரையோரத்தில் இருந்த அப்பாவி மக்களை இரக்கமின்றி விழுங்கியது.

சுனாமி பேரலை இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை அகோரமாக தாக்கியது. தமிழ்நாட்டில் கடலூர், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்ட கடற்கரைகளை வாரி சுருட்டி சென்றது. இந்த சுனாமி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பறித்து கொண்டு உடைமைகளையும் தூக்கி சென்றது. இதனால் பலரும் வீடுகளை இழந்து தவித்தனர்.

இந்நிலையில், சுனாமி தினத்தையொட்டி திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16 -ஆம் ஆண்டு. 2004 டிசம்பர் 26 சுனாமியில் உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம். உடைமை இழந்தோரின் உரிமை காப்போம். சீற்றங்கள் குறைந்திடும் வகையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் என்று பகிர்ந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்