நெருங்கும் தேர்தல் ! நாளை அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம்

அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் நாளை நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025