ரஷ்யாவில் நடந்த கொடூரம்.. இளம்பெண்ணின் முகத்தை கடித்து குதறிய 10 நாய்கள்..!
ரஷ்யாவில் நேற்று முன்தினம் காலை, கிழக்கு சைபீரியாவில் உள்ள உலான்-உட் நகரத்தின் வழியாக பியூட்டிசன் நடந்து செல்லும்போது 10 நாய்கள் அவரின் மீது தாக்குதல் நடத்தியது. -22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் விலங்குகள் அவரது ஆடைகளை கிழித்தெறிந்து கடித்து குதறின.
இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் உதவ முன் வருவதற்குள் நாய்கள் கூட்டம் அந்த இளம்பெண்னின் முகத்தை கடுமையாக தாக்கியது. அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இப்போது தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நாய்கள் நடத்திய தாக்குதலில் அந்த பெண்ணின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது சிதைந்த முகத்தில் அவர் கண்கள் மட்டுமே இருந்தன என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பத்து நாய்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். நாய்களுக்கு வெறிநாய் பாதிப்பு ஏற்பட்டதா..? என்பதை விசாரணை நடத்தி வருகின்றன.