முறைகேடாக வீடியோகானுக்கு கடன் வழங்கிய விவகாரம்…!இயக்குநர் குழுவில் சிலர் சந்தா கோச்சார் பதவி விலக வலியுறுத்தல்?
தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில்,பதவி விலக வேண்டும் என இயக்குநர் குழுவில் சிலர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மீது புகார் எழுந்துள்ளது. இந்த முறைகேட்டில் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஆனால், சந்தா கோச்சார் மீது முழு நம்பிக்கை இருப்பதாக, கடந்த மார்ச் 28ஆம் தேதி கூடிய ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இயக்குநர் குழு கூறியது.
இந்நிலையில், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதற்கான முகாந்திரம் குறித்து வங்கியின் முதலீட்டாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து, சந்தா கோச்சார் பதவி விலக வேண்டும் என ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இயக்குநர் குழுவில் சிலர் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.