யூஸ்டு பைக் வாங்கப் போகிறீர்களா? இதோ.. உங்களுக்கான டிப்ஸ்!

Default Image

புதிய பைக்குகள் வாங்க முடியாத பலர், தற்பொழுது யூஸ்டு பைக்குகளை வாங்க தொடங்கிவிட்டனர். குறிப்பாக, கொரோனா ஊரடங்கு முடிந்ததும் பலரும் தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பலரும் பழைய/யூஸ்டு பைக்குகளை வாங்கி வருகின்றனர். அந்தவகையில், யூஸ்டு பைக்குகள் வாங்குவதற்கான டிப்ஸ்களை காணலாம்.

கவனித்து கொள்வது:

ஒரு வாகனம் வாங்கும்போது நீங்கள் முதலில் கவனித்துக்கொள்வது, அது எந்தொரு விபத்திலும் சிக்கியிருக்கக் கூடாது. அவ்வாறு விபத்தில் சிக்கி, ஏதாவது போலீஸ் கேஸ் இருக்கின்றதா? என்பதை நீங்கள் கேளுங்கள். அவ்வாறு கேட்பதில் தப்பே இல்லை. ஒரு வேளை கேஸ் இருப்பது உங்களுக்கு தெரியவந்தால், அதனை வாங்குவதை தவிர்க்கலாம்.

பொதுவாக யூஸ்டு பைக் என்றாலே நமக்கு தோன்றுவது, அது திருட்டு பைக்காக இருக்குமா என்ற சந்தேகம். வழக்கமான வரும் அந்த சந்தேகத்தை தீர்ப்பதற்கு ஒரு வழி இருக்கின்றது. அதற்கு நீங்கள் வாகனத்தின் லாக் உடைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை பார்க்கவும். அல்லது, மொத்த கீ செட்டும் புதிதாக மாற்றப்பட்டுள்ளதா என்பதை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். பின்னர், வண்டியின் RC பூக்கை பார்க்கலாம். அதில் இருக்கும் ஓனரை நேரில் பார்த்து, அதன்பின் அந்த வாகனத்தை வாங்குவது நல்லது.

theft bikes

வாகனத்தை நன்றாக பார்வையிடுவது:

பைக் வாங்குவதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, வண்டியின் ஓனர் நம்மிடம் நேர்மையாகவும், தெளிவாகவும் பதில் சொல்கிறாரா என்பது. மேலும், பைக் விபத்தில் சிக்கியுள்ளதா? என்ற கேள்வி இருக்கும். அதனை கண்டுபிடிப்பது எளிது. ஆனால் வண்டியின் புட் பேக்கை நன்றாக பார்க்கவும். அது வளைந்து, அல்லது தேய்ந்து இருந்தால், அந்த பைக் கீழே விழுந்ததாக அர்த்தம். அதனை கவனித்து வாங்குங்கள். முக்கியமாக பார்க்கவேண்டியது, அந்த வாகனம் ஓரளவுக்காவது பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

நீங்கள் பார்க்கும் வாகனத்தில் எந்த இடத்திலும் ஆயில் லீக் இருக்கக் கூடாது. அதன்பின் ஹெட்லைட், ஹார்ன், இண்டிகேட்டர், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் உள்ளிட்டவை நன்றாக வேலை செய்கிறதா என்பதை தெளிவாக கவனிக்க வேண்டும். அடுத்த, கடைசியாக சர்விஸ் செய்த தேதியை கேட்டு வைப்பது நல்லது. பைக்கின் லைட்ஸ் மாடிஃபை செய்யப்பட்டிருந்தாலோ அல்லது கூடுதல் லைட்ஸ் பொருத்தப்பட்டி ருந்தாலோ ஒயரிங்கை ஒரு முறை பார்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில், மோசமாக டேப் அடிக்கப்பட்டுள்ளதால் ஒயரிங் பிரச்னை நிகழ அதிகளவில் வாய்ப்புள்ளது.

இதனையெல்லாம் கவனித்த பின், நீங்கள் யூஸ்டு பைக்குகளை வாங்குவது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்