தங்க புதையல் கண்டுபிடிப்பு., உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம்.!
துருக்கியின் விவசாய கடன் கூட்டுறவுத் தலைவரான பஹ்ரெடின் பொய்ராஸ் மற்றும் உர உற்பத்தி நிறுவனமான குபெர்டாஸ் ஆகியோர் தங்க புதையலை கண்டுபிடித்துள்ளனர்.
துருக்கியில் மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்க புதையலின் எடை 99 டன் என்றும் தங்கத்தின் மதிப்பு ரூ.44,000 கோடி எனவும் கூறப்படுகிறது. உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியம். உர நிறுவனம் ஒன்று வாங்கிய நிலத்தில் இந்த தங்க புதையலை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெட்டி எடுக்கப்படும் என்றும், துருக்கி பொருளாதாரத்துக்கு இது மிகவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2018ல் இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 77 ஆயிரம் கோடி டாலராகும். அண்மையில், 38 டன் தங்கத்தை உற்பத்தி செய்ததன் மூலம் ஒரு பெரிய சாதனையை துருக்கி படைத்தது.
துருக்கியில் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தி, 100 டன்னாக உயரும் என, அந்நாட்டின் எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர்பாத்தி டான்மெஸ் தெரிவித்துள்ளார். புதையல் கிடைத்ததை அடுத்து, பொருளாதார பாதிப்புகளை ஓரளவு எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தங்கத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 6 பில்லியன் டாலர்கள், மாலத்தீவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.87 பில்லியன் டாலர்கள்.
உலக அளவீடு (GDP) மொத்த உள்நாட்டு உற்பத்தியை 3,17 பில்லியன் டாலர்களாகவும், பார்படாஸ், கயானா, மாண்டினீக்ரோ, மவுரித்தேனியா, லெசோதோ 6 பில்லியன் டாலர்களை விடவும் குறைவாகவும் உள்ளது. இதனிடையே, மறுபுறம், துருக்கியில் உள்ள அகதிகளுக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த ஆண்டில் 590 மில்லியன் டாலர்களை வழங்க திட்டமிட்டுள்ளது. துருக்கி அரசாங்கத்திற்கு நேரடியாக வழங்காமல் அகதிகளுக்கு வழங்குவதாகவும் 700,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கு உதவுவதாகவும் ஆணையம் கூறியது.