அமேசான் நிறுவனம் இப்போது ஷெல் லூப்ரிகண்ட் நிறுவனத்துடன் கூட்டணியில்..!!
அமேசான் இந்தியா நிறுவனம், லாஸ்ட் மைல் கனெக்ஷன் (கடைசி மைல் இணைப்பு) என்கிற ஒரு திட்டத்தின்கீழ், ஷெல் லூப்ரிகண்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த லாஸ்ட் மைல் கனெக்ஷன் ஒப்பந்தத்தின் கீழ், அமேசான் ஆன்லைன் தளம் வழியாக ஷெல் தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம் மற்றும் ஆயில் மாற்றம் ஃபிட்மெண்ட் சர்வீஸ் போன்ற விஷயங்களை ஹோம் டெலிவரி போன்றே வீட்டு வாசலிலேயே பெறலாம்.
இந்த சேவைகள் பெங்களூரில் கிடைக்கின்றன. இந்த சேவையைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் Amazon.in தளத்திற்குள் நுளைந்து ஷெல் தயாரிப்புகளை வாங்க வேண்டும்.
பின்னர் ஆயில் மாற்றம் மற்றும் ஃபிட்மெண்ட் சர்வீஸ் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். கொள்முதல் செய்யப்படும் தயாரிப்புகளின் அடிப்படையில், அமேசான் இந்தியா நிறுவனமானது, CarZippi (Proflakes Solutions Pvt Ltd) உடன் ஒரு ஃபிட்மெண்ட் கோரிக்கையை பதிவுசெய்கிறது.
CarZippi ஆனது ஷெல் நிறுவனத்தின் ஒப்புதல் பெற்ற ஒரு கூட்டாளர் ஆகும். அனுப்பட்ட கோரிக்கையானது Carzippi மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 48 மணி நேரத்திற்குள், வாடிக்கையாளருக்களுக்கான ஒரு சேவை கோரிக்கை எண்ணும், முழுமையான ஃபிட்மெண்ட்டும் செய்து தரப்படும்.
கார் என்ஜீன் ஆயில் பேக் இந்த திட்டத்தின் வழியாக, Shell Helix Ultra (4L), Shell HX7 (3L, 3.5L), Shell Helix HX5 (3L, 3.5L, 4L) கார் என்ஜீன் ஆயில் பேக் போன்றவற்றை வாங்கினால் இலவசமாக ஆயில் சேன்ஜ் மாற்றம் ஃபிட்மென்ட் சர்வீஸை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர, ஷெல் பைக் என்ஜின் ஆயில்களும், மினரல் மற்றும் சின்தடிக் வரம்பிலான கார் என்ஜின் ஆயில்களும் கூட அமேசான் வழியாக வாங்க கிடைக்கும். ஒருவேளை, மற்ற லூப்ரிகன்ட் பிராண்டுகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இதே சேவைகளை ரூ.299/- என்கிற தொகையை செலுத்துவதின் வழியாக அணுகலாம்.