#BREAKING: 103 கிலோ தங்க மாயம்.. திருட்டு வழக்கு பதிவு..!

103.86 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.

சட்ட விரோதமாக தங்கம் இறக்குமதி தொடர்பாக கடந்த 2012 சென்னையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ சோதனை செய்தனர். அந்த சோதனையில் 400.47 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு சுரானா நிறுவனத்தில் இருந்த லாக்கரில்  நகைகள் வைக்கப்பட்டு சிபிஐ அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

அந்த நகையில் 103.86 கிலோ தங்கம் மாயமானதால் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வழக்கு முழுமையாக விசாரணை நடைபெறவேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்த நிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் 380 (திருட்டு) பிரிவின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கியது. மேலும், திருட்டு வழக்கில் தொடர்புடைய சிபிஐ அதிகாரிக்கு சம்மன் அனுப்பவும், சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan