10 கி.மீட்டரை வெறும் 62 நிமிடங்களில் ஓடிய 5 மாத கர்ப்பிணி பெண்..!

Default Image

பெங்களூருவில் டி.சி.எஸ் 10 கே மராத்தான் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த  மராத்தான் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. வழக்கமாக மே-ஜூன் மாதங்களில் நடைபெற்றது, இருப்பினும் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக, இது டிசம்பரில் மாதம் நடைபெற்றது.

இந்த மராத்தானில் பங்கேற்க ஏராளமானோர் வந்தனர். இந்த மாரத்தான் போட்டியில் ஒரு அதிசயம் ஓன்று நிகழ்ந்தது. அது என்னெவென்றால் அங்கிதா கவுர் என்ற ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஓருவர் வெறும் 62 நிமிடங்களில் 10  கி.மீ கடந்துள்ளார். அங்கிதா, 2013 முதல் டி.சி.எஸ் வேர்ல்ட் 10 கே-யில் பங்கேற்று வருகிறார். பெர்லின் (மூன்று முறை), பாஸ்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட ஐந்து முதல் ஆறு சர்வதேச மராத்தான்களிலும் பங்கேற்றுள்ளார்.

இந்த மராத்தானில் ஒவ்வொரு முறையும் பதக்கங்களை வெல்வது வழக்கம் என்று அங்கிதா கூறினார். இருப்பினும் இந்த முறை அது நடக்கவில்லை, மருத்துவரின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அங்கிதா பந்தயத்தில் பங்கேற்றார். ஓடுவதில் எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் தெரிவித்தார் என அங்கிதா கூறினார், மருத்துவரின் ஒப்புதல் இருந்தபோதிலும், அங்கிதாவின் தாயார் ஆரம்பத்தில் இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. பின்னர், பெற்றோரைத் தவிர, அங்கிதாவின் கணவரும் ஆதரவு கொடுத்தார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் தவறாமல் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறேன், எனவே இது எனக்கு சுவாசம் போன்றது. இது இயல்பாகவே என்னுள் இருக்கிறது என அங்கிதா கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்