10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும்- மேற்கு வங்க கல்வி அமைச்சர்..!

10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஜூன் மாதத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும் என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்தார். 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முதலில் நடைபெறும், அதன் பிறகு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று அவர் கூறினார்.
தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் மேற்கு வங்க உயர்கல்வி கவுன்சில் பரிந்துரைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு தேர்வுகளை தாமதமாக நடத்தியுள்ளோம். நிலைமை மாறினால், வாரியமும் அதற்கேற்ப முடிவுகளை எடுக்கும் என்று அவர் கூறினார்.
பொதுத்தேர்வுகள் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறும். சமீபத்தில் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த தேர்வுகளும் நடைபெறாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
April 11, 2025