பிரசாந்த் ஸ்டுடியோவுக்கு எதிராக போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கிய இளையராஜா!
பிரசாத் ஸ்டூடியோவில் எந்த ஒரு உரிமையும் கோர மாட்டேன். பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக இளையராஜா மனு அளித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 40 ஆண்டுகளாக இசையமைப்பு பணியை மேற்கொண்டு வந்தார். இதனையடுத்து, தனக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், பிரசாந்த் ஸ்டூடியோவுக்கு சென்று தனது சொந்தமான பொருட்களை எடுத்து வர அனுமதி அளிக்க வேண்டும் என இளைஞரான தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம், இளையராஜாவை ஒரு நாள் ஸ்டூடியோவுக்குள் பொருட்களை எடுப்பதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சனை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த கேள்விக்கு ஸ்டுடியோ நிர்வாகம் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
மேலும், இளையராஜாவும் அவரும் உதவியாளர்கள், காவல்துறையினர் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆணையர் ஆகியோரை ஸ்டுடியோவிற்குள் அனுமதிக்கலாமா?என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த ஸ்டுடியோ நிர்வாகம், தங்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை இளையராஜா அவர்கள் வாபஸ் பெறுவதாக தெரிவித்தால், அவரை அனுமதிக்கலாம் என பிரசாந்த் ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இளையராஜா அளித்துள்ள மனுவில், பிரசாத் ஸ்டூடியோவில் எந்த ஒரு உரிமையும் கோர மாட்டேன் என்றும், தனது பொருட்களை மட்டும் எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் இளையராஜா அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.