2020 ஆம் ஆண்டில் ஸ்விக்கியில் முதலிடம் பிடித்த பிரியாணி ஆர்டர்!

Default Image

இந்த வருடம் இந்தியர்களுக்கு மிகப் பிடித்தமான உணவாகவும் வினாடிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டு ஆர்டர் செய்யப்பட்ட உணவாகவும் சிக்கன் பிரியாணி உள்ளது என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபலமான ஆன்லைன் உணவு பரிமாறும் செயலி தான் ஸ்விக்கி. இந்த ஸ்விக்கி செயலி மூலமாக பல மக்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை விருப்பமான நேரங்களில் ஆர்டர் செய்து வாங்கி உண்டு வருகின்றனர். ஆர்டர் செய்த சில மணி நேரங்களிலேயே வீட்டினை வந்தடையும் இந்த ஸ்விக்கி உணவுக்கு பலரும் அடிமைகளாக உள்ளனர் என்றுதான் கூறியாக வேண்டும். அதிலும் இந்த ஸ்விக்கி உணவிலேயே இந்தியர்களுக்கு மிக பிடித்தமான உணவாக இந்த வருடம் சிக்கன் பிரியாணி தான் உள்ளது என நிறுவனத்தின் மூலமாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுததோறும் வெளியிடப்பட கூடிய ஸ்டேட் ஸ்டிக்ஸ் எனும் தரவுகளின்படி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வருடம் புதியதாக சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து வாடிக்கையாளர்களாகி உள்ளதாகவும், அலுவலக முகவரிகளை விட, வீட்டு முகவரிக்கு தான் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிகமாக உணவுகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு பிந்தைய ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 9 மடங்கு ஆர்டர் செய்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், வேலை செய்யும் பலர் டீ மற்றும் காபியை அதிகமாக ஆர்டர் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். பின்பு பானிபூரி அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் தெரிவித்த ஸ்விக்கி நிறுவனம், பெங்களூரில் 150 சதவீதம் மக்கள் சத்தான உணவுகளை ஆர்டர் செய்ததாகவும், தில்லியில் உள்ள மக்கள் அதிக சத்தான உணவுகளை ஆர்டர் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சிக்கன் பிரியாணியை விரும்பி ஆர்டர் செய்துளளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு இந்தியர்களின் பிடித்தமான உணவாக பிரியாணி தான் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வினாடிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்விக்கி நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்