உலகிலேயே மிகவும் வயதான பாண்டா கரடி உயிரிழப்பு!
உலகிலேயே வயதான ஜின்க்சிங் எனப்படும் பாண்டா கரடி மூச்சுத்திணறல், இருமல் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் உயிரிழந்துள்ளது.
தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உலகிலேயே வயதான ஜின்க்சிங் எனப்படும் பாண்டா கரடி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி இந்த பாண்டா கரடியின் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், இதற்கு மூச்சுத்திணறல், இருமல் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து இந்த கரடிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. செரிமான கோளாறு காரணமாக சுவாசக் குழாயில் தொற்று பாதிப்புக்குள்ளான பாண்டா டிசம்பர் மாத தொடக்கத்தில் உயிரிழந்துள்ளது. இந்த பாண்டா சுமார் 38 வருடங்கள் உயிர் வாழ்ந்துள்ளது. இந்த மிருக காட்சி சாலையின் தொழில்நுட்ப இயக்குனர் இதுகுறித்து கூறுகையில், உலகெங்கிலும் உள்ள 30க்கும் மேற்பட்ட மாபெரும் பாண்டாக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழவில்லை என தெரிவித்துள்ளார்.