5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் குறித்து பயிற்சி – ரமேஷ் பொக்ரியால்
பொதுத்தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்று , மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் ,அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு தேர்வுத் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முதலில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து,தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் ,மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்று, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுடன் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை மேற்கொண்டார்.இதில் பேசிய அமைச்சர் , சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை நடத்த இது உகந்த சூழல் இல்லை. தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்று சூழலைப் பொறுத்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது.அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு தேர்வுத் தேதி அறிவிக்கப்படும். சிபிஎஸ்இ சார்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் குறித்துப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.