10 மாதங்களாக மக்களுக்கு இலவசமாக ரைஸ் ATM மூலம் நிதி வழங்கும் தொழிலதிபர்!

Default Image

10 மாதங்காக மக்களுக்கு இலவசமாக ரைஸ் ATM மூலம் நிதி வழங்கும் தொழிலதிபர், ஒரு பெண்ணை பார்த்து தான் இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

ஹைதராபாத்திலுள்ள தெற்கு மாநிலத்தில் வசித்துவரக்கூடிய தொழிலதிபர் தான் ராமு. இவர் கொரோனா ஊரடங்கு துவங்கிய ஏப்ரல் மாதத்திலிருந்து மக்களுக்கு தனது சொந்த செலவில் தேவைப்படும் பொழுதெல்லாம் ATM ரைஸ் எனும் செயல் மூலமாக உணவளித்து வருகிறாராம். 24 மணி நேரமும் இந்த சேவையை வழங்கிவரும் இவர், இதற்காக கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்துள்ளாராம். அதே சமயம் இந்த யோசனையை தான் ஒரு பெண்ணிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஒரு சகோதரி 2000 ரூபாய்க்கு கோழி கறி வாங்கியதை நான் கண்டேன், அவரிடம் யாருக்கு என கேட்ட பொழுது 192 பேர் புலம்பெயர்ந்து வந்துள்ளதாகவும், அவர்களுக்கு விருந்தாக தான் அவள் அதை வாங்குவதாகவும் கூறினாள். அவளது சம்பளம் எவ்வளவு என்றால் வெறும் 6000 ரூபாய் தான். வெறும் 6000 சம்பளம் வாங்கும் அந்த பெண்மணியே 2000 மற்றவர்களுக்காக செலவழிக்கும் பொழுது நாம் ஏன் சேவை செய்யக்கூடாது என தோன்றியதாகவும், அதனால் தான் அன்றிலிருந்து இவ்வாறு பிறருக்கு உதவி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், ரைஸ் ATM எனும் வார்த்தையை கேட்டு பலர் தன்னிடம் உதவிக்காக வந்ததால், ஒரு பெரிய கடை உரிமையாளரிடம் கடனுக்கு வாங்கி கொடுத்து வருவதாகவும், அதை தர உறுதியளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

US Election 2024 live
donald trump benjamin netanyahu
PM Modi - Trump
Royal Enfield Interceptor Bear 650
sathya (2) (1)
Donald Trump
Tamilnadu CM MK Stalin