வாழவைத்த கடவுள் – நடிகர் சோனு சோனு சூட்டிற்க்கு கோவில் கட்டிய தெலுங்கானா கிராமத்தினர்!
கொரோனா வைரஸ் காலங்களில் வாழ்வாதாரம் இழந்து தவித்த பலருக்கு உதவி செய்ததற்காக நடிகர் சோனு சூட் அவர்களுக்கு தெலுங்கானாவில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகில் விஜயகாந்தின் கள்ளழகர் எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, தற்பொழுது தெலுங்கு, தமிழ் ஆகிய திரை உலகில் பிரபலமான வில்லனாக நடித்து வருகிறவர் தான் சோனு சூத். கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தங்களது இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு இருப்பதுடன் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். வைரஸ் பாதித்த ஒரு சில மாதங்கள் மட்டுமே அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தது. அதுபோல நடிகர்கள் மற்றும் பிரபலமான சிலரும் ஒரு சில மாதங்கள் உதவி செய்தனர், அதன் பின்பு அந்த மக்கள் குறித்து யாரும் கவலை கொள்ளவில்லை. ஆனால் நடிகர் சோனு சூத் அவர்கள் தற்போது வரையிலும் தனது சொத்துக்களை கூட அடகு வைத்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வரக்கூடிய பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
அண்மையில் கூட மும்பையில் உள்ள தனக்கு சொந்தமான 6 பிளாட் மற்றும் 2 கடைகளை அடமானம் வைத்து 10 கோடி வாங்கி அதையும் மக்களுக்காக செலவு செய்திருந்தார். இந்நிலையில் இவரது நல் மனசை கௌரவப்படுத்தும் வகையில் பல இடங்களிலும் பாராட்டுகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபெட் என்னும் மாவட்டத்தில் உள்ள துப்ப தாண்டா எனும் கிராமத்தில் அவருக்கு மக்கள் கோவில் கட்டியுள்ளனர். தங்களை வாழ வைத்த கடவுள் எனவும் தங்களுக்காக உதவி செய்த அவரை கௌரவிக்கும் வகையிலும் இந்த கோவிலை மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். இந்த கோயிலில் அவரது சிலையை அமைத்து அதற்கு ஆரத்தி எடுத்து பாட்டு பாடி மகிழ்ந்து வருகின்றனர். இதோ அதில் சில புகைப்படங்கள்,
Temple dedicated to @SonuSood sir by #telangana dubbathanda village in Siddipet ????????????♥️ @FcSonuSood pic.twitter.com/e9mChazVJO
— KONDRU CHAITANYA KUMAR (@ChaitanyaKondru) December 21, 2020