முகத்தை பளபளக்க செய்யும் கொத்தமல்லி இலை!

Default Image

இயற்கையான முறையில் நாம் எந்த விதத்தில்  சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டாலும் அது சற்று மெதுவாக தான் பலனை தரும். 

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது சரும அழகை அழகிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தங்களது சருமத்தை பொலிவாக காட்டுவதற்காக பல செயற்கையான கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தி பக்கவிளைவுகளை தேடிக் கொள்கின்றன. ஆனால் இயற்கையான முறையில் நாம் எந்த விதத்தில்  சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டாலும் அது சற்று மெதுவாக தான் பலனை தரும். ஆனால் அந்த பலன் நிரந்தரமான பலனாக காணப்படும்.

அந்த வகையில் தற்போது இந்த பதிவில் கொத்தமல்லி இலை சருமத்தை எவ்வாறு அழகுபடுத்துகிறது என்பது பற்றி பார்ப்போம்.

  • கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து, அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் கலந்து தோல் மீது தடவி வந்தால், தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
  • புதினா மற்றும் கொத்தமல்லி இலை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.
  • மூக்கை சுற்றி கரும்புள்ளிகள் காணப்பட்டால் இதனை தடுக்க கொத்தமல்லி சாறு சிறிது மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ கரும்புள்ளிகள் நீங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்