குட் நியூஸ்: வெளியானது PUBG Mobile Beta 1.2 குளோபல் வெர்சன்.. உங்கள் போனில் பதிவிறக்கம் செய்யலாம்.

Default Image

பப்ஜி மொபைல் பீட்டா 1.2 குளோபல் வெர்சன் பரிசோதனைக்கு வெளியான நிலையில், அதனை எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்து காணலாம்.

சீன செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்த காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்தியாவில் முதற்கட்டமாக 59 செயலிகளை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பின் பப்ஜி உட்பட 117 செயலிகளையும் ரத்து செய்தது. இதனால் பப்ஜி பிரியர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர்.

இந்தியாவில் பப்ஜி தடை காரணமாக அந்நிறுவனத்திற்கு பல கோடி ருபாய் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், இந்தியளவில் பப்ஜி விளையாட்டினை பலரும் விளையாடி வரும் காரணத்தால், இந்தியாவில் மீண்டும் பப்ஜி செயலியை கொண்டு வருவதற்கான முயற்சிகளை கொரிய நிறுவனம் மேற்கொண்டு, இந்தியாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய கேமான “பப்ஜி மொபைல் இந்தியா” என்ற பெயரில் வெளியிடவுள்ளதாகவும், இதற்காக 240 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

தற்பொழுது பப்ஜிக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் நிலையில், அந்த கேமின் சோதனை முயற்சிக்காக அதன் பீட்டா வெர்சனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. அதனை எப்படி பதிவிறக்கம் செய்து விளையாடலாம் என்பது குறித்து காணலாம்.

  • PUBG Mobile Beta 1.2 குளோபல் வெர்சனை பதிவிறக்கம் செய்யவேண்டுமானால், முதலில் இந்த லிங்கை தொடவும்.
  • அதன்பின் “Install from Unknown sources” என்று வரும். அதற்கு “enable” என்பதை கொடுத்து, அதனை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்தபின் கேமிற்குள் சென்று, அதில் கேட்கும் பேட்சஸ்க்கு “ALLOW” என்பதை கொடுக்கவும்.
  • கேமிற்குள் சென்றதும் லாகின் செய்யவும். அதன்பின் “PUBG Mobile” என்பதை க்ளிக் செய்து, “Test Server” என்பதை தேர்வுசெய்யவும்.
  • அடுத்த “Generate Code” என வரும். அதனை தேர்வு செய்து, அதிலுள்ள கோடை COPY செய்து, பப்ஜி பீட்டாக்குள் சென்று, அந்த கோடை paste செய்யவும்.
  • அவ்வாறு செய்ததும், நீங்கள் விளையாட தொடங்கலாம்.
  • ஒருவேளை “There was a problem parsing the package” என வந்தால், நீங்கள் மீண்டும் ஒருமுறை பதிவிறக்கம் செய்து பார்த்து விளையாடலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்