பரவும் புதிய வகை கொரோனா ! பிரிட்டன் விமானங்களுக்கு இந்தியாவில் தடை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது.அந்தவகையில் இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், லண்டனில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதாவது ,புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் இந்த வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறதாகவும் அந்நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அந்நாட்டில் மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.ஆகவே இங்கிலாந்தில் பரவிவரும் இந்த புதிய வகையான கொரோனா பரவலால் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் நிறுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் நாளை இரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை இரவு 11.59 வரை இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிலையங்களுக்கு வரும்போது கட்டாயமாக ஆர்டி-பிசிஆர் சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
This suspension to start w.e.f. 23.59 hours, 22nd December 2020. Consequently flights from India to UK shall stand temporarily suspended during above said period.
— MoCA_GoI (@MoCA_GoI) December 21, 2020