விவசாயிகளிடம் அடிபணிந்த பேஸ்புக் நிறுவனம் மீண்டு வந்த ‘கிஸான் மோர்ச்சா’ பக்கம்

Default Image

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 26-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுவரைக்கும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது .

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினர், ‘கிஸான் மோர்ச்சா’ என்ற முகநூல் பக்கத்தை துவங்கியுள்ளனர்.இந்த பக்கம் ஆரம்பித்த 5 நாட்களில் 75,000 க்கு அதிகமான பின்தொடர்பவர்களை பெற்றது.இதில்  போராட்டங்கள் பற்றிய வீடியோக்கள் ,புகைப்படங்கள்,செய்திகளை பதிவிட்டுவந்தனர்.இந்த பக்கத்தை முகநூல் நிறுவனம் தீடிரென நீக்கியது .

இது மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தான் பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மூன்று மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்