இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு டெல்லி முதல்வர் கோரிக்கை!
இங்கிலாந்தில் பரவிவரும் இந்த புதிய வகையான கொரோனா பரவல் காரணமாக அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்பொழுது பல நாடுகளில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, அவசர கால ஒப்புதலுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், லண்டனில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது, புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் இந்த வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறதாகவும் சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அந்நாட்டில் மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் பரவிவரும் இந்த புதிய வகையான கொரோனா பரவலால் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் நிறுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
New mutation of corona virus has emerged in UK, which is a super-spreader.
I urge central govt to ban all flights from UK immediately.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 21, 2020