ஜனவரி 8… ராக்கி பாயின் மிரட்டல்… கே ஜி எஃப் 2 மாஸ் அப்டேட்..!
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் வருகின்ற ஜனவரி மாதம் 8ஆம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெற்றியை கண்டது . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது .
ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் அவர்களும் ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களும் நடிக்கின்றனர்.மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது . அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருந்த இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடை செய்யப்பட்டு ரிலீஸ் தள்ளி போனது.
இந்த படத்திலிருந்து அதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்று சில தினங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்திருந்தனர். மேலும் அதனை தொடர்ந்து 21ம் தேதி அதாவது இன்று கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் அப்டேட் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் படக்குழுவினர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.
ஆம் கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் வருகின்ற ஜனவரி மாதம் 8ஆம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை ரசிகர்கள் ட்வீட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.
A glance into the Empire ????
It might have taken a year longer for this, but we are coming stronger, bigger & deadlier!#KGFChapter2TeaserOnJan8 at 10:18 AM on @hombalefilms youtube.@VKiragandur @TheNameIsYash @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @BasrurRavi @bhuvangowda84 pic.twitter.com/evCn5jiBkn— Prashanth Neel (@prashanth_neel) December 21, 2020