புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்! இந்திய மருத்துவ நிபுணர்கள் அவசர ஆலோசனை!

Default Image

இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் வேகமாக பரவும் புதியவகை கொரோனா வைரஸ். புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து அவசர ஆலோசனை கூட்டம்.

இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், லண்டனில் கொரோனா பரவல் தற்பொது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது, புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் வேகமாக பரவிவருகிறதாகவும் சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனாவின் இந்த புதிய வகை குறித்து இங்கிலாந்து ஏற்கனவே உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவித்துள்ள  நிலையில், விஞ்ஞானிகள் புதிய உருமாற்றத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். தலைநகர் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீது மூன்றடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கபடாவிட்டால் பொருளாதாரத்தில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதன்காரணமாக இங்கிலாந்தில் மூன்றடுக்கு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், இங்கிலாந்தில் விமான சேவைகள் அனைத்தம்  நிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில், எய்ம்ஸ் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வல்லுநர்கள், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்