‘கிஸான் மோர்ச்சா’ – பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினர், ‘கிஸான் மோர்ச்சா’ என்ற முகநூல் பக்கத்தை துவங்கிய நிலையில், இந்த பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த சில வாரங்களாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பனியையும் பொருட்படுத்தாமல், 26-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினர், ‘கிஸான் மோர்ச்சா’ என்ற முகநூல் பக்கத்தை துவங்கியுள்ளனர். இதனையடுத்து, இந்த முகநூல் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தான் பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.