அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக விழா – பிரதமர் மோடி உரை

Default Image

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் :

இந்திய மேலவைச் சட்டத்தின் கீழ் முகமது ஆங்கிலோ ஓரியண்டல் (எம்.ஏ.ஓ) கல்லூரியை மத்தியப் பல்கலைக்கழகமாக உயர்த்தியதையடுத்து,அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், கடந்த 1920-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக மாறியது.எம்.ஏ.ஓ கல்லூரி, கடந்த 1877-ஆம் ஆண்டு சர் சையது அகமது கானால் நிறுவப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் 467.6 ஹெக்டர் நிலப்பரப்பில் பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது.மல்லபுரம் (கேரளா), முர்ஷிதாபாத் ஜங்கிபூர் (மேற்கு வங்காளம்) மற்றும் கிஷன்கஞ் (பிகார்) ஆகிய மூன்று நகரங்களிலும் இந்தப் பல்கலைக்கழகத்தின் மையங்கள் இயங்குகின்றன.

இந்நிலையில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.இந்த நிகழ்ச்சியின் போது ஒரு தபால் தலையையும் பிரதமர் வெளியிட உள்ளார். பல்கலைக்கழகத்தின் வேந்தர் சையேத்னா முஃபதல் சைபுதீன் மற்றும் மத்திய கல்வி அமைச்சர்ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்