கோல்டன் குளோப் விருது…. தேர்வாகிய 2 தமிழ் படங்கள்..!
கோல்டன் குளோப் விருது விழாவில் வெளிநாட்டு படப்பிரிவில் சூரரைப்போற்று மற்றும் அசுரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளனர்.
பிரபலமான விருதான ஆஸ்கார் விருதுக்கு அடுத்ததாக திரைக்கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு விருதாக இருப்பது கோல்டன் குளோப் விருதுகள் என்றே கூறலாம், மேலும் கோல்டன் குளோப் விருது விழாவில் வெளிநாட்டு படப்பிரிவில் 2 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளனர்.
அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மற்றும் மேலும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படமும் உள்ளது.
மலையாளத்தில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு மற்றும் ஹிந்தியில் லுடோ உள்ளிட்ட திரைப் படங்களும் திரையிட இருக்கின்றன, மேலும் இந்த பட்டியலிலுள்ள அசுரன் மற்றும் ஜல்லிக்கட்டு திரைப்படங்கள் கோவா இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.