மக்களின் வரிப்பணம்., முதல்வரின் முயற்சி பலிக்காது – முத்தரசன்

Default Image

பொங்கல் பரிசின் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முதல்வரின் முயற்சி பலிக்காது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் எனவும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் இதுகுறித்து பேசியுள்ளார். மக்கள் வரிப்பணத்தை எடுத்து பொங்கல் பரிசு என்ற பெயரில் தேர்தல் நேரத்தில் லஞ்சமாக வழங்கி அரசியல் ஆதாயம் தேடுகிறார் முதல்வர் பழனிசாமி. முதல்வரின் முயற்சி பலிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும்போது முதல்வர் பழனிசாமி நிவாரணம் வழங்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது சுயநலத்துக்காக பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா? என்றும் கொரோனா மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.5,000 வழங்கவேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்