தாய்லந்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று!
தாய்லாந்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று. கடந்த 7 மாதங்களில், இது அதிகப்படியான தொற்று எண்ணிக்கை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தாய்லாந்தில் தற்போது புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில், இது அதிகப்படியான தொற்று எண்ணிக்கை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொற்றானது இறால் சந்தையிலிருந்து பரவியுள்ளது. சந்தையில் இறால் விற்கும் 67 வயதான ஒரு பெண்ணுக்கு இந்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் அவரது குடும்பத்தில் மூன்று பேருக்கு தொற்று நேர்மறை ஆகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இன்னும் ஊரடங்கு தேவையில்லை. ஆனால் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தாய்லாந்து கொரோனா தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்இதுகுறித்து கூறுகையில், அந்தப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், மேலும் சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தல் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.