கொரோனா முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும்-
சீனா தனது கொரோனா தடுப்பூசியை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு முதலில் போடப்படும் என தெரிவித்துள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நாடுகளில் பொருளாதார அளவில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ஊரடங்கை கலைத்தது. இதனால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, அவசர கால ஒப்புதலுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அமெரிக்கா தயாரித்துள்ள ஃபைசர் தடுப்பு மருந்திற்கு பிரிட்டனில் அனுமதி வழங்கியுள்ளது. அது 95 சதவீதம் பலனளித்தது. இதனையடுத்து அந்த கொரோனா தடுப்பு மருந்து அமலுக்கு வந்தது. இந்தநிலையில் சீனா தயாரித்து வரும் தடுப்பு மருந்தை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு முதலில் போடப்படும் என அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, சீனாவின் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனைகளை நடத்துவதற்காக பிரேசில் உட்பட ஒசில நாடுகள் முன்வந்துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் நாடுகள் சீனாவின் சினோபார்ம் உருவாக்கிய தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவசரகால பயன்பாட்டு ஏற்பாட்டின் கீழ் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.