பாகிஸ்தான் கொரோனா கண்காணிப்பு அமைப்பின் தலைவருக்கு கொரோனா உறுதி!
பாகிஸ்தான் நாட்டின் கொரோனா கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ஆசாத் உமருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வீசத்தொடங்கிய நிலையில், பொதுமக்கள் முதல் அதிபர் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், பாகிஸ்தான் நாட்டின் கொரோனா கண்காணிப்பு அமைப்பின் தலைவர் மற்றும் நிதியமைச்சர் ஆசாத் உமர்க்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இதுவரை 4,54,673 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 9,250 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,04,501 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.