அர்ச்சனாவுக்கு குருநாதர் கொடுத்த பல்பு – வாயடைத்த அர்ச்சனா!
கடந்த வாரம் அர்ச்சனாவின் சில செயல்பாடுகள் ரசிகர்களையே கோபமடையச் செய்த நிலையில், இன்று போட்டியாளர்களை சந்தித்துப் பேசிய கமல் அர்ச்சனாவின் தவறுகளை சுட்டிக் காட்டிப் பேசுகிறார்.
75 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைய உள்ளது. 10 போட்டியாளர்கள் தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். இந்த வார இறுதியில் உள்ளே இருப்பவர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார். இந்நிலையில் கடந்த வாரம் அர்ச்சனாவின் சில செயல்பாடுகள் ரசிகர்களையே கோபமடைய செய்யும் வகையில் இருந்தது.
இன்று போட்டியாளர்களை கமல் வழக்கம் போல நேரலையில் சந்தித்து பேசுகையில், அர்ச்சனாவின் செயல்கள் சரியானது தானா என அவர் செய்த ஒவ்வொன்றையும் கமல் அவர்கள் எடுத்துக் கூறுகிறார். அதற்கு பதில் கூற அர்ச்சனா வந்தாலும், கமல் அர்ச்சனாவின் தவறை சுட்டிக்காட்டி வாயை அடைத்து விடுகிறார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram