அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் – எல் முருகன்
தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் – பாஜக மாநில தலைவர் எல் முருகன்.
விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க பேசிய எல்.முருகன், இன்று முதல் 21-ம் தேதி வரை பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்த சுற்று பயணத்தின் போது வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் விவசாயிகளும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தயுள்ளார் என கூறப்பட்டது.
அதன்படி, அரியலூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என பேட்டியளித்துள்ளார்.