80,000 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கிய பஞ்சாப் முதல்வர்.!
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வியை எளிதாக்கும் வகையில்,அரசு பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 1,75,443 மாணவர்களுக்கு பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்பு திட்டத்தின் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார்.
அதன்படி, நேற்று இரண்டாம் கட்டமாக 80,000 பேருக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் முதல் கட்டமாக 50,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பஞ்சாப் முதல்வர், எங்கள் அரசு பள்ளிகளில் தடையற்ற ஆன்லைன் கல்வியை எளிதாக்குவதற்காக, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்க முடிவு செய்தோம். 1,75,443 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களில் தற்போது வரை 1,30,000 பேருக்கு ஸ்மார்ட்போன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் வழங்கப்படும் என தெரிவித்தார்.