கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஹைதராபாத் பல்கலைக்கழகம் விதித்துள்ள கட்டணத்திற்கு கண்டனம்!

Default Image

கொரோனா பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ள மாணவர்களிடம் ஒரு நாளைக்கு 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என ஹைதராபாத் பல்கலைக்கழகம் எடுத்துள்ள நடவடிக்கையை மாணவர் சங்கம் கண்டித்துள்ளது.

பல்கலைக்கழக அதிகாரிகள் சார்பில் ஹைதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒரு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் கட்டணமாக விதிக்க வேண்டும் எனும் நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. நஇந்த நடவடிக்கையை ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கம் கண்டித்துள்ளது. மேலும் தொழிற்சங்க துணைவேந்தர் பி.அப்பா ராவ் அவர்களும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறும், விடுதிகளில் அல்லது விருந்தினர் மாளிகையில் இலவசமாக வாழ்வாதாரதுடன் சரியான தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட அறைகளை மாணவர்களுக்கு வழங்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மாணவர்கள் மற்றும் தொழில்சங்கம் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் தங்களது தனிமைப்படுத்தலுக்கு இவ்வளவு பணம் செலுத்த முடியாது என தொழிற்சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் பிற வசதிகள் கூட வழங்கப்படாத நிலையில் இவ்வளவு கட்டணம் வசூலிப்பது தவறு எனவும், நியாயமற்றது எனவும் மாணவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்